முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றார் நவாஸ் ஷெரீப்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் நேற்று லண்டன் சென்றுள்ளார்.

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும் லண்டன் சென்று சிகிச்சை பெற்றால் மட்டுமே அவரது உடல்நிலை தேறும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்க ரூ. 700 கோடிக்கான உறுதி மொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை இம்ரான்கான் அரசு விதித்தது. அதனை ஏற்க மறுத்த நவாஸ் ஷெரீப் இது தொடர்பாக லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எந்தவித நிபந்தனையுமின்றி நவாஸ் ஷெரீப்பின் பெயரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நீக்க அரசுக்கு உத்தரவிட்டனர். இதன் மூலம் அவர் லண்டன் செல்வதில் நீடித்த சிக்கல் நீங்கியது. இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் நேற்று லண்டன் புறப்பட்டு சென்றார். அனைத்து வகையான மருத்துவ உபகரணங்கள் அடங்கிய விமான ஆம்புலன்சில் அவர் சென்றுள்ளார். சிறிது காலம் லண்டனில் தங்கி சிகிச்சை பெறும் நவாஸ் ஷெரீப், அதன் பின்னர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வாய்ப்பு உள்ளதாக முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து