சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      உலகம்
china coal accident 2019 11 19

பெய்ஜிங் : சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகள் தரப்பில் கூறியிருப்பதாவது, சீனாவின் வடக்கில் உள்ள ஷான்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். சுரங்கத்தில் உள்ள எரிவாயு வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, சீனாவின் கிழக்குப் பகுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ரசாயனத் தாக்குதலில் 78 பேர் பலியாகினர். 600 பேர் வரை காயமடைந்தனர்.கடந்த 2015-ம் ஆண்டு சீனாவில் தியாஜின் வேதித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தொடர் வெடி விபத்தில் 165 பேர் பலியாகினர். 2016-ம் ஆண்டு சீனாவின் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட ரசாயன வாயு வெளியேற்றத்தில் 23 பேர் பலியாகினர். சீனாவில் தொழிற்சாலை மற்றும் சுரங்கங்களில் சரியான பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால் அங்கு விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து