முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ராஜினாமா

புதன்கிழமை, 20 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

 கொழும்பு : மக்கள் தீர்ப்பை மதித்து ரனில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே வலியுறுத்தினார்.  இந்நிலையில் ரனில் விக்ரமசிங்கே தனது  பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர்  அதிபராக   பதவி ஏற்றார்.

அதைத் தொடர்ந்து தனது 74-வது பிறந்த நாளையொட்டி கொழும்பு நகரில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே கலந்து கொண்டு விட்டு நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், மக்கள் தீர்ப்பை மதித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பதவி விலகவேண்டும் என வலியுறுத்தினார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ நாடாளுமன்றத்துக்கு பொதுத்தேர்தல் வந்தால் நல்லது. ஏற்கனவே கேபினட் மந்திரிகள் பலரும் பதவி விலகி உள்ளனர். அதிபரும், மந்திரிசபையும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன்” என கூறினார்.

இந்நிலையில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்து அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து