எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணி அடுத்ததாக 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடர் உலக சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 60 புள்ளிகள் வழங்கப்படும். இந்த தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை தொடங்குகிறது.
டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலியா, பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக விளங்குகிறது. ஆஷஸ் தொடரில் 3 சதம், 3 அரைசதம் உள்பட 774 ரன்கள் குவித்து வியப்பூட்டிய ஸ்டீவன் சுமித் அந்த அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்டில் விளையாட உள்ளார். அவருடன் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், மார்னஸ் லபுஸ்சேன், ஜோ பர்ன்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள்.
பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள். பிரிஸ்பேனில் 1988-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி ஒரு போதும் தோற்றது கிடையாது. அதன் பிறகு 30 டெஸ்டுகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலியா 23-ல் வெற்றியும், 7-ல் டிராவும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஆசாத் ஷபிக், பாபர் அசாம், இமாம் உல்-ஹக், ஹாரிஸ் சோகைல், ஷான் மசூட் என்று திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனால் ஆஸ்திரேலிய பந்து வீச்சை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
ஸ்டீவன் சுமித்தை கட்டுப்படுத்தினால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பும் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் ‘ஸ்டீவன் சுமித் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. அவரது விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவதற்கு சில திட்டங்கள் வைத்துள்ளோம். ஆப்-ஸ்டம்புக்கு சற்று மேல்வாக்கில் பந்து செல்லும் வகையில் அவருக்கு பந்து வீச வேண்டும். அதுவும் இடைவிடாது ஒரே பகுதியில் பந்தை பிட்ச் செய்து வீச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் அவருக்கு நெருக்கடி உருவாகி, தவறிழைக்க வாய்ப்பு உண்டு. இந்த வியூகத்தை எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


