எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கள்ளக்குறி்ச்சி : தமிழகத்தின் 34-வது மாவட்டம் கள்ளக்குறி்சசியின் சிறப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உங்கள் முகமலர்ச்சியோடு, அரசால் தோற்றுவிக்கப்படுகிறது. இப்புதிய மாவட்டத்தின் மக்களுக்கு முதலில் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலாற்றுக்கு வடக்கில் இருப்பது வட ஆற்காடு மாவட்டம் என்றும், தெற்கில் இருப்பது தென் ஆற்காடு மாவட்டம் என்றும் இருந்தது. 1993-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தென் ஆற்காடு மாவட்டத்திலிருந்து பிரித்து விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இன்று விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாவதால், மாவட்டத்திற்கான அரசு அலுவலக வளாகம், மாவட்ட மருத்துவமனை, பல்வேறு துறைகளின் மாவட்டஅலுவலகங்கள் என ஒரு மாவட்டத்திற்கு உரிய அனைத்து வசதிகளையும் பெறும்.இதனால், இது வரை மக்கள் தங்களது தேவையினை நிறைவேற்றிக் கொள்ள அரசு அலுவலகங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்யும் நேரம் குறைந்து, எளிதில் அரசு அலுவலகங்களை அணுக வழிவகை செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டமும், மக்களும் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிச் செல்ல இது ஏதுவாக இருக்கும். பழம் பெருமைகளைக் கொண்டது இம்மாவட்டம். உதாரணமாக, ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கிடையே, தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஒரு நாடு அமைந்திருந்தது. மலைகள் அதிகம் கொண்டது என்பதால் மலையமா நாடு என்று அழைக்கப்பட்டது. அம்மலை நாடு பெண்ணையாற்றின் உதவியால் பல வளங்களும் பெற்று சிறந்திருந்தது.
திருக்கோவிலூரை தலைநகரமாகக் கொண்ட அம்மலையமா நாட்டை காரி என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் முதலில் முள்ளூருக்கும், முள்ளூர் மலைக்கும் தலைவனாகி, பிறகு மலை நாட்டிற்கே அரசன் ஆனான். சிறந்த கல்விமானான காரி, ஊர்கள் தோறும் கல்விக் கூடங்கள் பல அமைத்தான். ஆண், பெண் பேதமின்றி மக்கள் கல்வியறிவு பெற ஏற்பாடு செய்தான். காரி, கல்வி மட்டுமன்றி, போர்ப் பயிற்சியிலும் வலிமை கொண்டவனாக விரும்பினான். வில், வேல் போன்ற படைக்கல பயிற்சிகளிலும் பங்கேற்று வலிமை உடையவனாக விளங்கினான். அதனால் மூவேந்தர்களும், தங்களுக்கு வேண்டிய பொழுதெல்லாம் அவனைப் படைக்குத் துணையாக அழைப்பர். காரி எப்பக்கமோ, அப்பக்கமே வெற்றி என்ற நிலையில் காரியின் போர்த்திறன் பெரிதும்போற்றப்பட்டது. கல்வி, வீரம் மட்டுமன்றி, நெஞ்சின் ஈரத்திலும் நிகரில்லாத வள்ளலாக காரி திகழ்ந்தான். போரில் செய்த உதவிகளின் பொருட்டு, மூவேந்தர்களும் அவனுக்குபல பொருட்களை பரிசாக வழங்கினார்கள். அவ்வாறு பெற்ற செல்வத்தை ஒருபோதும் தன்னுடையதாகக் கொண்டதில்லை காரி. அனைத்தும் பிறருடையது என்ற எண்ணம்கொண்டிருந்தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த காரி மன்னர் ஆட்சி செய்த ஊர் தான்திருக்கோவிலூர் ஆகும். அதே போல, சின்ன சேலம், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் பிரதான நகரமாக உள்ளது. இந்த சின்ன சேலம் பேரூராட்சியில் பல நவீன அரிசி ஆலைகள் உள்ளன. மேலும், இப்பேரூராட்சிப் பகுதியில்அதிக அளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு நெல் அறுவடை இயந்திரங்கள் இப்பகுதியில் இருந்து தான் செல்கின்றன.
புதிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகராக கள்ளக்குறிச்சி நகராட்சி விளங்கும்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மக்கள் தொகை 13,70,281. மாவட்டத்தின் பரப்பளவு 3,520.37 சதுர கிலோ மீட்டர். கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூரில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் இயங்கும். மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்ன சேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன் மலை ஆகிய 6 வட்டங்களும், 23 உள் வட்டங்களும், 558 வருவாய் கிராமங்களும் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில் திருக்கோவிலூர் (பகுதி), கள்ளக்குறிச்சி, சங்கராபுரம்,உளுந்தூர்பேட்டை (பகுதி), ரிஷிவந்தியம் என 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் உட்பட 9 ஊராட்சி ஒன்றியங்களும், சின்ன சேலம்,சங்கராபுரம் உட்பட 7 பேரூராட்சிகளும், 406 கிராம ஊராட்சிகளும் அமைந்துள்ளன.
இம்மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன் மலையானது கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியாகும். மேலும், பச்சைமலை, ஜவ்வாது மற்றும் சேர்வராயன் மலைகள் ஆகியவற்றுடன் இவை காவேரி ஆற்றுவடி நிலத்தை பாலாற்றின் வடிநிலத்திலிருந்து பிரிக்கும் எல்லைகளாக அமைந்துள்ளன. கல்வராயன் மலையின் வட பகுதி சின்ன கல்வராயன் மலை என்றும், தென் பகுதி பெரியகல்வராயன் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மணியாறு மற்றும் முக்தா ஆறு இணையும் இடத்தில் மணிமுக்தா அணை கட்டப்பட்டுள்ளது. இம்மலையில்தான்கோமுகி நதி உற்பத்தியாகி, அந்நதியின் குறுக்கே கோமுகி அணை கட்டப்பட்டுள்ளது.கோமுகி அணையைச் சுற்றி 15 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய பூங்காஅமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் நீராட மேகம், பெரியார் மற்றும்புண்ணிம்பாடி போன்ற அருவிகள் உள்ளன. மலையில் உள்ள ஓடையின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, படகு குழாம் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்று சுற்றுலாப் பயணிகளை கவரும் பல்வேறு அம்சங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன.இம்மாவட்டத்தில் மணிமுக்தா மற்றும் கோமுகி அணைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 16,300 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. இதில் நெல் மற்றும் கரும்பு,கடலை, எள் மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்கள் அதிக அளவில் சாகுபடிசெய்யப்படுகின்றன. இதனால் இம்மாவட்டத்தில் கோமுகி சர்க்கரை ஆலை, மூங்கில் துறைப்பட்டு சர்க்கரை ஆலை, தியாகதுருகம் சர்க்கரை ஆலை என பலசர்க்கரை ஆலைகளும், நவீன அரிசி ஆலைகள் போன்ற பல தொழிற்சாலைகளும் நிறைந்துள்ளன. மேலும், இங்கே அரசின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளிலும், புதியகாடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள மலையோர கிராமங்களிலும் சுவைமிக்க விளாம் பழங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளியூர்களுக்குஅனுப்பப்படுகிறது.
இது போன்ற எண்ணற்ற இயற்கை வளங்களைக் கொண்ட இந்த மலைப் பகுதிகளை, வருங்காலங்களில், தேவைகளுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மலைவாழ் மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். அரசும் மலைவாழ் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து நல்ல பலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வராயன் மலையில் வாழும் பழங்குடியின மக்களுக்கான திட்டங்களை சீரியமுறையில் செயல்படுத்த ஒரு திட்ட அலுவலரும், அலுவலகமும் 2017- முதன்முறையாக ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் மலைவாழ் மக்களுக்கான திட்டங்கள் விரைந்து சென்றடைவது உறுதி செய்யப்பட்டது. பி.எட்., மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த பழங்குடியினஇளைஞர்களைக் கொண்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, அவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்ட பழங்குடியின மக்கள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்ள ஏதுவாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டுத் திறன் மேம்பாட்டுமையம் ஒன்று வெள்ளிமலையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய கள்ளக்குறிச்சி மாவட்டம் தோற்றுவிக்கப்படுவதன் மூலம், மலைவாழ் மக்கள் வாழுகின்ற மலைப் பிரதேசமான கல்வராயன் மலையை உள்ளடக்கிய ஒரு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இதற்காக கட்டடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்., சுகாதாரத் துறை மூலமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 3.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்துமற்றும் அவசர கால சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 12.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாய் சேய் நலப் பிரிவு அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் 1.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை மூலமாக பல்வேறு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டும் பல்வேறு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இவவாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க.வா? த.வெ.க.வா? கூட்டணி முடிவை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்..!
11 Jan 2026சென்னை, இன்று காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026 -
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எப்பொழுதுமே கிடையாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளதாக அமைச்சர் தகவல்
11 Jan 2026சென்னை, காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்ப
-
ஈரோட்டில் உள்ள சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என பெயர் சூட்டினார் முதல்வர்
11 Jan 2026சென்னை, ஈரோட்டில் உள்ள சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
-
யாரிடமும் பேதம் காட்டாமல், யாரையும் பிரித்து பார்க்காத ஒரே மொழி 'தமிழ்' மொழி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
11 Jan 2026சென்னை, தமிழ்மொழி என்பது நம் அனைவரையும் இணைக்க கூடிய ஒரு மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப்பார்க்காது.
-
புதிய ஓய்வூதிய திட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உண்மையை ஒருநாள் நிச்சயம் உணர்வார்கள்: இ.பி.எஸ்.
11 Jan 2026சென்னை, ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. முன்பாக இன்று ஆஜராகிறார் விஜய்
11 Jan 2026கரூர், கரூர் பெருந்துயரம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று காலை 7 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.
-
கிரோக் ஏ.ஐ. தள விவகாரம்: இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக எக்ஸ் நிறுவனம் உறுதி
11 Jan 2026புதுடெல்லி, எலான் மஸ்க்குக்கு சொந்தமான சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தின் ஏஐ சாட்போட் ஆன கிரோக் தளம் தொடர்பான புகாரில் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி அளித்துள்ள
-
16-வது நாளாக தொடர் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேர் கைது
11 Jan 2026சென்னை, சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
-
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வருகிற 15-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்
11 Jan 2026ராமேசுவரம், கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள
-
கடலூர், அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 Jan 2026சென்னை, தமிழகத்தில் கடலூர், அரியலூர் உள்ளிட்ட இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
17 வணிக செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: 12 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்
11 Jan 2026சென்னை, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Jan 2026சென்னை, இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் ம
-
மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது
11 Jan 2026மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி அங்கு
-
'ஹெத்தை' அம்மன் திருவிழா: படுகர் மக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
11 Jan 2026சென்னை, நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
-
ஒருநாள் பயணமாக கேரளா சென்ற அமித்ஷா பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கேரளா சென்றுள்ளார்.
-
சுவேந்து அதிகாரி தாக்கப்பட்டதாக புகார்: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம்
11 Jan 2026கொல்கத்தா, சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, அதனைக் கண்டிக்கும் விதமாக, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.
-
ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் பரபரப்பு
11 Jan 2026தெக்ரான், ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் போராட்டங்கள் 2-வது வாரத்தை எட்டி உள்ளது.
-
3-வது பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
11 Jan 2026திருவனந்தபுரம், கேரளத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாம்கூட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
-
மத்திய அரசை கண்டித்து முதல்வர் பினராயி தலைமையில் எல்.டி.எப் இன்று போராட்டம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி சத்தியாகிரகப்' போராட்டத்தை இன்ற
-
மெரினா கடற்கரையில் குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
11 Jan 2026சென்னை, மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
-
இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்: கோவையில் நிதின் நபின் பேச்சு
11 Jan 2026கோவை, இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும் என்று கோவையில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசியுள்ளார்.
-
இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமராக இருப்பார்: அசாம் முதல்வர் ஹிமாந்தா பேச்சு
11 Jan 2026திஸ்பூர், இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது.
-
குஜராத், சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் : சவுரியா யாத்திரையிலும் பங்கேற்பு
11 Jan 2026அகமதாபாத், சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி, காலை 9.45 மணியளவில் பூஜைகள் செய்து, சாமி தரிசனம் மேற்கொண்டார்.
-
பிப்ரவரி 2-வது வாரத்தில் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டம்: சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
11 Jan 2026சென்னை, பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2-வது வாரத்தில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


