திண்டுக்கல் ஊராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர்கள் பயிற்சி முகாம்

செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2019      திண்டுக்கல்
26 election news

 திண்டுக்கல் - திண்டுக்கல் ஊராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
 நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் 2019க்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடத்த வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நத்தம், சாணார்பட்டி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் க்காண பயிற்சி முகாம் நடைபெற்றது.உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஆரோக்கிய ஜோசப், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், மலரவன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் தேர்தலின்போது தேர்தல் அதிகாரிகள் நடந்து கொள்ளக் கூடிய  முறைகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார்கள். மேலும் ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட வார்டு கவுன்சிலர்கள் ஆகிய தேர்தல்களில் பணிபுரிவதற்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நத்தம், திண்டுக்கல், சாணார்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏராளமான பங்கேற்றனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உட்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து