பிரதமர் மோடியுடன் ஜப்பான் அமைச்சர்கள் சந்திப்பு

சனிக்கிழமை, 30 நவம்பர் 2019      இந்தியா
japan minister meet pm modi 2019 11 30

புது டெல்லி : இந்தியா வந்துள்ள ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி மற்றும் பாதுகாப்பு அமைச்சா் தாரோ கோனோ ஆகியோா் பிரதமர் நரேந்திர மோடியை தலைநகர் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தியா - ஜப்பான் நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்களிடையேயான பேச்சுவாா்த்தை டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டோஷிமிட்ஸு மோதேகி, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் தாரோ கோனோ ஆகியோா் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து