முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: டிராவில் முடிந்தது ஐதராபாத் - பெங்களூரு ஆட்டம்

சனிக்கிழமை, 30 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஐதராபாத் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த ஐதராபாத் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஐதராபாத்தின் சஹில் பன்வார் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால் 56-வது நிமிடத்தில் இருந்து 10 வீரர்களுடன் ஆடிய நிலையில் கடைசி நிமிடத்தில் ஐதராபாத் வீரர் ராபின் கோல் போட்டு தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - மும்பை (இரவு 7.30 மணி) அணிகள் மோதின. உலக கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டங்களில் இந்திய வீரர் சத்யன் 11-13, 9-11, 11-8, 14-12, 7-11, 11-5, 11-8 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் சிமோன் காவ்சியையும், 11-3, 12-10, 7-11, 16-14, 8-11, 11-8 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் குரோத் ஜோனதனையும் சாய்த்தார். இரட்டை வெற்றியை சுவைத்த தமிழகத்தை சேர்ந்த சத்யன் 4 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதலிடம் வகிப்பதுடன், கால்இறுதிக்கு முந்தைய சுற்றை உறுதி செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து