முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பட்னாவிஸ் தேர்வு - முதல்வர் உத்தவ் தாக்கரே வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : மராட்டிய மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மராட்டிய மாநில சட்டசபை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்காக சட்டசபை நேற்று கூடியது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதே போல்,  சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

முதல்வர் உத்தவ் தாக்கரே வாழ்த்தி பேசுகையில், பட்னாவிசை நான் எதிர்கட்சி தலைவராக பார்க்கவில்லை. பொறுப்புள்ள தலைவராக பார்க்கிறேன். என் நண்பரான அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன். என் மனதில் உள்ள இந்துத்துவா சித்தாந்தத்தை ஒருபோதும் விடமாட்டேன். கடந்த 5 ஆண்டுகளாக பட்னவிஸ் அரசுக்கு உறுதுணையாக இருந்தேனே தவிர துரோகம் செய்யவில்லை. அவர்கள் எங்களுடன் நட்பாக இருந்திருந்தால் இருகட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டிருக்காது. நான் உண்மையில் அதிர்ஷ்டக்கார முதல்வர் தான். என்னை எதிர்த்தவர்கள் இப்போது என்னுடன் இருக்கிறார்கள். நட்பாக இருந்தவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர். அதிர்ஷ்டத்தாலும், மக்களின் ஆசியுடனும் முதல்வராக வந்திருக்கிறேன். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து