Idhayam Matrimony

பின்லாந்து நாட்டுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்கிட இந்தியா ஒப்புதல்: பிரதமர் மோடி தகவல்

வியாழக்கிழமை, 5 மார்ச் 2026      இந்தியா
PM-Modi-2026-03-05

டெல்லி, பின்லாந்து நாட்டுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்கிட இந்தியா ஒப்புதல் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஹைதராபாதில் பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, டிஜிட்டல்மயமாக்கல், நிலைத்தன்மை, எரிசக்தி, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள் முதலான துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் ஈடுபாட்டை ஆழப்படுத்தவும் ஒப்புக்கொண்டனர். பின்லாந்துடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பின்லாந்துடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடி பேசுகையில், "இந்தியாவும் பின்லாந்தும் தங்களின் இருதரப்பு உறவுகளை டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட ஒரு கூட்டணியை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த கூட்டணி ஏஐ முதல் 6ஜி தொலைத்தொடர்பு வரையில், எரிசக்தி முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் வரையில் பல்வேறு உயர் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை வழங்குகிறது. மேலும், பாதுகாப்பு, விண்வெளி, செமிகண்டக்டர்கள், முக்கியமான கனிமங்கள் ஆகியவற்றிலும் ஒத்துழைப்பு ஆழப்படுத்தப்படவுள்ளது. பின்லாந்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான நோக்கியாவின் மொபைல் மற்றும் நெட்வொர்க் தொழில்நுட்பங்கள் லட்சக்கணக்கான இந்தியர்களை இணைத்துள்ளன. இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவுக்கு பின்லாந்துக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். இன்று, உலகம் அதன் உறுதியற்ற மற்றும் நிலையற்ற தன்மையின் காலத்தில் உள்ளது. உக்ரைன் முதல் மேற்கு ஆசியா வரை உலகின் பல பகுதிகளில் மோதல்கள் நீடித்து வருகின்றன. இத்தகைய உலகளாவிய சூழலில் உலகின் இரண்டு முக்கிய சக்திகளான இந்தியாவும் ஐரோப்பாவும் தங்கள் உறவின் பொற்காலத்தில் நுழைகின்றன" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து