எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க், பல்வேறு நாடுகளிடம் இருந்து வரி என்ற பெயரில் வசூலித்த 130 பி.டாலரை வட்டியோடு திருப்பி செலுத்த வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10% முதல் 18% வரை வரி விதித்தார். அமெரிக்காவின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் ட்ரம்ப் இந்த வரியை விதித்திருந்தார். ஆனால் கடந்த பிப்ரவரி 20 அன்று, அமெரிக்க உச்சநீதிமன்றம் இந்த வரி விதிப்பு அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவித்தது. வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு, அதிபருக்கு இல்லை என்று நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
இந்த சூழலில் ஏற்கனவே வரி என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட சுமார் 130 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 லட்சம் கோடி) தொகையை இறக்குமதியாளர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என மன்ஹாட்டன் நகரில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம் ட்ரம்ப் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வாசித்த நீதிபதி ரிச்சர்ட் ஈடன், அசல் தொகையுடன் மட்டுமல்லாமல், வரி வசூலிக்கப்பட்ட நாள் முதல் கணக்கிட்டு வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பால் அமெரிக்காவில் உள்ள சுமார் 3 லட்சம் இறக்குமதியாளர்கள் மற்றும் வணிகர்கள் பயனடைவார்கள். இதற்கிடையில், பிப்ரவரி 24 முதல் 'பிரிவு 122' என்ற மற்றொரு சட்டத்தைப் பயன்படுத்தி தற்காலிகமாக 10% வரியை உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது ட்ரம்ப் அரசு வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


