முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டிற்குள்ளே எப்படியாவது மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 5 மார்ச் 2026      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

தஞ்சாவூா், இன்றைக்கு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எப்படியாவது மீண்டும் தமிழ்நாட்டிற்குள்ளே இந்தியை திணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய பா.ஜ.க அரசு மீது துணை முதல்வர் உதயநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தஞ்சாவூா் கரந்தை தமிழ் சங்கத்தில் இன்று தமிழ் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் முன்னாள் முதல்வர்  கருணாநிதி உருவசிலை மற்றும் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவர் செயலாளர் ராமநாதன் உருவ சிலையை துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

இன்றைக்கு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எப்படியாவது மீண்டும் தமிழ்நாட்டிற்குள்ளே இந்தியை திணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டினுடைய கல்வி நிதி ரூ.3,500 கோடியை கொடுக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் அந்த 3,500 கோடியை கொடுப்போம் என்று மத்திய அரசு கூறுகிறது.

ஆனா நம்முடைய முதல்வர்  3,500 கோடி இல்லை. 10,000 கோடி கொடுத்தாலும் இந்தியையும் சமஸ்கிருதத்திற்கும் தமிழ்நாட்டில் எந்த நேரத்திற்கும் இடம் கிடையாது என்று உறுதியாக கூறிவிட்டார். கருணாநிதி வழியில் நம்முடைய முதல்வர்  தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைச் செய்து வருகிறது.

தமிழினுடைய தொன்மையை வெளி உலகிற்குச் சொல்கிற வகையிலே வேர்ச்சொல் ஒப்பீட்டு ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது . தமிழறிஞர்களுக்கு விருதுகளும், தேசிய சர்வதேச விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகளும் நம்முடைய முதல்வர்  தொடர்ந்து வழங்கி வருகிறார். தமிழினுடைய அரிய நூல்கள் எல்லாமே இன்றைக்கு டிஜிட்டல் வடிவில் மாற்றப்படுகிறது. தமிழில் இருக்கக்கூடிய சிறந்த நூல்கள் உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அதேபோல் உலகின் சிறந்த நூல்களை எல்லாம் தமிழில் கொண்டுவர முயற்சிகளை நம்முடைய அரசு எடுத்து வருகின்றது.

ஆனால் மத்திய அரசு சமஸ்கிருதத்தை வளர்க்கிறதில் மட்டும்தான் அக்கறையைக் காட்டி வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ.2,500 கோடி. ஆனால் நம்முடைய தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகை வெறும் 147 கோடி ரூபாய்.

தமிழ் தமிழ்ன்னு சொல்லி இன்றைக்கு மக்களை ஏமாற்றும் வேலையை மத்திய அரசு செய்து வருகின்றது. அந்த ஏமாற்று வேலைகளை எல்லாம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். உண்மையாகத் தமிழுக்காக உழைப்பவர்கள் யார்? போலித்தனமாக நடிப்பவர்கள் யார்? என்பதை மக்களுக்கு நாம் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டும். எனவே இந்த முக்கியமான நேரத்தில் நீங்கள் அத்தனை பேரும் நம்முடைய முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அன்னைத் தமிழைப் காப்போம், ஆதிக்க மொழித் திணிப்பை என்றும் வீழ்த்துவோம் என்று பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து