Idhayam Matrimony

திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சு: எல்லாம் முடிந்துவிட்டதாக சைகை காட்டியது எதனால்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

வியாழக்கிழமை, 5 மார்ச் 2026      தமிழகம்
Stalin 2022 12 29

தஞ்சை, தஞ்சையில் நடந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத் திருமண விழாவில், தேர்தல் கூட்டணி பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் பேசினார்.

விழாவில் பேசிய அவர், "நேற்று இரவு (நேற்று முன்தினம் இரவு) வரை, கூட்டணி கட்சிகளுடன் பேசி ஒப்பந்தத்தை முடித்துவிட்டுதான், அதுவும் வெற்றிகரமாக முடித்துவிட்டுதான், எல்லோரும் பாராட்டும் வகையில் முடித்துவிட்டுதான் வந்திருக்கிறேன். நீங்கள் எல்லோரும் சமூக வலைதளங்களில் பார்த்திருக்கலாம், ஒப்பந்ததை முடித்துவிட்டு காரில் ஏறியபோது, கை காட்டிவிட்டு காரில் ஏறினேன். அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை, காரில் ஏறியபோது அங்கு நின்று கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்து 'முடிந்துவிட்டது' என்று கூறினேன். அதை இன்றைக்கு பெரிய வைரல் ஆகிவிட்டார்கள்.

ஆகவே, அந்த மகிழ்ச்சியுடன்தான் வந்திருக்கிறேன். அதுமட்டுமில்லாமல், இந்த திருமணத்தை முடித்துவிட்டு மாநிலங்களவை வேட்பாளர்களாக இரண்டு பேரை நாம் அறிவித்திருக்கிறோம், கூட்டணி கட்சிகளுக்கு இரண்டு இடங்கள் கொடுத்திருக்கிறோம், அந்த 4 பேரும் சரியாக பகல் 12 மணி அளவில் சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார்கள். இன்றுதான் (நேற்று) கடைசி நாள், நான் வந்தே ஆக வேண்டும் என கட்டளையிட்டிருக்கிறார்கள். ஆகவே, இதை முடித்துவிட்டு உடனடியாக நான் செல்ல வேண்டிய சூழல் இருக்கிற காரணத்தால்தான் வேகவேகமாக வந்து திருமணத்தை முடித்து வைத்துவிட்டு செல்லவிருக்கிறேன்" எனப் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து