முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய சீனியர் கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு விரைவில் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்தது என பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். மேலும் இந்திய சீனியர் கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளது.

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே. பிரசாத் உள்ளார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு தலைவராக நியமிக்கப்பட்டார். இவருடன் ககன் கோடாவும் நியமிக்கப்பட்டார். ஜட்டின் பரஞ்போ, சரன்தீப் சிங், தேவங் காந்தி ஆகியோரும் தேர்வுக்குழுவில் உள்ளனர். இவர்கள் 2016-ல் நியமிக்கப்பட்டனர். லோதா பரிந்துரைக்கு முன் தேர்வுக்குழுவினரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாக இருந்தது. லோதா பரிந்துரையில் அது ஐந்து ஆண்டுகளாக மாற்றப்பட்டது. எனினும், பிரசாத்தின் பதவிக்காலம் குறித்து முடிவு செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில்தான் பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தலைமையில் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பழைய நடைமுறையின்படி தேர்வுக்குழுவின் காலம் நான்கு ஆண்டு. அதனால் பதவிக்காலம் முடிந்து விட்டதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை கங்குலி உறுதி செய்துள்ளார். மேலும், 2016-ல் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய சீனியர் கிரிக்கெட் அணிக்கு புதிதாக தேர்வுக்குழு நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து