பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் - ராகுல் காந்தி

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      இந்தியா
rahul 2019 12 04

திருவனந்தபுரம் : நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்து உள்ளது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். வயநாடு தொகுதி மக்களை சந்திக்க ராகுல் காந்தி நேற்று கேரளா சென்றார்.

கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரிடம் நிருபர்கள் நாட்டின் பொருளாதார நிலை குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்து ராகுல் காந்தி கூறியதாவது:-

நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்தித்து உள்ளது. இதற்கு பிரதமர் மோடியும், அமித்ஷாவுமே காரணம். அவர்கள் கற்பனையான உலகில் வாழ்ந்து வருகிறார்கள். பொருளாதார நெருக்கடிக்கு இவர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்.

பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் மக்களின் குரலை கேட்பதில்லை. அவர்களின் பிரச்சினையை காது கொடுத்து கேட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

மக்களின் குரலை கேட்காமலேயே நாட்டின் பொருளாதாரம் நிலையாக இருப்பதாக கூறுவது அவர்கள் இன்னும் கற்பனை உலகில் இருந்து வெளியே வரவில்லை என்பதை தான் காட்டுகிறது.

இந்த நிலை இப்போது மாறி வருகிறது. இதனால் தான் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து