முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகள் - அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருநாள் வரும் 10-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுவதை முன்னிட்டும்,11-ம் தேதி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,விழுப்புரம் சார்பாக சென்னையிலிருந்து சுமார் 500 சிறப்பு பேருந்துகளும்,  மற்றும் தாம்பரம், விழுப்புரம், திருப்பத்தூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, ஆற்ககாடு போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 1112 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்படுகிறது. கும்பகோணம் அரசு

போக்குவரத்துக் கழகம் சார்பாக கும்பகோணம், திருச்சி பகுதிகளிலிருந்து 450 சிறப்பு பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சேலம், பொங்களூர், தர்மபுரி, ஓசூர் பகுதிகளிலிருந்து 251 சிறப்பு பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக 122 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்து கழகம் சார்பாக 100 சிறப்பு பேருந்துகளும், நெல்லை அரசு போக்குவரத்துக் கழம் சார்பாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளிலிருந்து 80 சிறப்பு பேருந்துகளும் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 2615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் அனைவரும் இந்த சிறப்புப் பேருந்து இயக்க வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து