தங்கம் விலை குறைந்தது!

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      வர்த்தகம்
gold price rise 2019 06 12

சர்வதேச சந்தையில் நேற்று தங்கத்தின் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த நிலையில் நேற்று தங்கம் விலை 29 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து விற்பனையானது.

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.224 குறைந்து ரூ.28,896-க்கு விற்பனையானது.  அதேசமயம், ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 28 குறைந்து ரூ.3,612க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையும் நேற்று சிறிதளவு குறைந்திருந்தது.  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.46.60 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.46,600 ஆகவும் விற்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து