நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - ராகுல்

சனிக்கிழமை, 7 டிசம்பர் 2019      இந்தியா
rahul 2019 09 07

Source: provided

திருவனந்தபுரம் : நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது கண்டனத்திற்குரியது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். 

கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி சுல்தான் பதேரி பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:-

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது கண்டனத்திற்குரியது. பெண்கள் பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு பாலியல் தொல்லை போன்ற செய்திகள் தினமும் வெளியாகிக்கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துகொண்டிருக்கிறீர்கள்.

மேலும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதுடன், அவர்களுக்கு எதிரான வெறுப்புணர்வும் அதிகரித்துள்ளது.

சட்டம், ஒழுங்கை மக்கள் கையில் எடுத்து கொள்வதால், நமது அடிப்படை கட்டமைப்புகள் உடைந்து போகின்றன. இதற்கு காரணம், நாட்டை வழிநடத்துகிறவர் வன்முறையையும், அதிகாரத்தையும் நம்புவதே . நாட்டின் மிகப்பெரிய பலமே பொருளாதாரம் தான். அதுவே இப்போது மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து