எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : டெல்லி தொழிற்சாலையில் நேற்று நடந்த பயங்கர தீ விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த 43 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த தீ விபத்து சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மத்திய டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டி என்ற பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அனஜ் மண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் அதிகாலை 5.22 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் முதலில் 35 பேர் உயிரிழந்தனர். தீயை அணைக்கும் பணியில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். மருத்துவமனையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 43 உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
தொழிற்சாலைக்குள் பை தயாரிக்கும் இயந்திரம் இருந்த பகுதியில் இருந்தே தீ பரவத் தொடங்கியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட போது 50 பேர் தொழிற்சாலையில் இருந்துள்ளனர். அதிகாலை 5 மணி என்பதால் அனைவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அதனால், மூச்சுத் திணறலில் பலரும் இறந்துள்ளனர். உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அனைவரும் டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மற்றும் இந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், டெல்லி தீ விபத்து செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்து பகுதியில் மீட்புப் பணியில் அனைத்து தேவையான உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில், டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டுகிறேன். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தீ விபத்து ஏற்பட்ட பகுதியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று காலை பார்வையிட்டு விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். தீக்காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியை டெல்லி வடகிழக்கு பாஜக எம்.பி., மனோஜ் திவாரி பார்வையிட்டு இது ஒரு சோகமான சம்பவம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, பா.ஜ.க. சார்பில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.25000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், அனுமதியின்றி வீட்டில் தொழிற்சாலை நடத்தி 43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளர் ரேஹான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
திருப்பரங்குன்றம் வழக்கு: ராம ரவிக்குமார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு
08 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ராம ரவிக்குமார் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
-
பொங்கல் பரிசு தொகை டோக்கன் வாங்காதவர்கள் என்ன செய்யலாம்..?
08 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
கடலூரில் இன்று நடைபெறுகிறது தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு: கூட்டணி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
08 Jan 2026கடலூர், கடலூரில் தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறிதது அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்பொழுது? அமைச்சர் சேகர்பாபு தகவல்
08 Jan 2026சென்னை, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து அ.தி.மு.க. பேச்சுவரத்தை: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Jan 2026புதுடெல்லி, பா.ம.க.வைத் தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் எங்களுடன் வந்து இணையவுள்ளார்கள்.
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் நிச்சயம் வெற்றி பெறும்: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
08 Jan 2026சென்னை, உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி அலறுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ரகுபதி, இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவ
-
சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் மாநாடு: ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
08 Jan 2026சென்னை, சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைய
-
3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூரில் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
08 Jan 2026சென்னை, சென்னை ஆலந்தூரில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
08 Jan 2026மதுரை, சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
ஞாயிற்றுக்கிழமையான வரும் பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய பார்லி. குழு பரிந்துரை
08 Jan 2026புதுடெல்லி, ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய பாராளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
கணினிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய சீனா திடீர் தடை
08 Jan 2026பீஜிங், சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் ராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னணு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட
-
மேலும் வலுப்பெற்ற தாழ்வு மண்டலம்: திருவாரூர், நாகப்பட்டினத்தில் இன்று மிக கனமழை பெய்யும்
08 Jan 2026சென்னை, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜன.
-
பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது: இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
08 Jan 2026சென்னை, பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என்று இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியா? ரிலையன்ஸ் விளக்கம்
08 Jan 2026புதுடெல்லி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கிடையாது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க கலெக்டர் தலைமையில் மாவட்டம்தோறும் குழு தமிழ்நாட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
08 Jan 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்
08 Jan 2026புதுடெல்லி, முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுக்கும் பணிகள் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு
-
ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி
08 Jan 2026சிட்னி, ஆஷஸ் தொடரில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
-
9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு மொத்தம் 6.5 கோடி பேரின் பெயர்கள் நீக்கம்..!
08 Jan 2026புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.


