சந்திரயான்-3 திட்டத்திற்காக ரூ. 75 கோடி வழங்க வேண்டும் - மத்திய அரசிடம் இஸ்ரோ கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      இந்தியா
Chandrayaan-3 2019 12 08

ஸ்ரீஹரிகோட்டா : சந்திரயான்-3 திட்டத்திற்காக மேலும் ரூ.75 கோடி வழங்க மத்திய அரசிடம் இஸ்ரோ கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சந்திரயான்-2 செயற்கைகோள் நிலவில் தரையிறங்குவதில் பின்னடைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்காக ரூ.75 கோடி வழங்க மத்திய அரசிடம் இஸ்ரோ கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு 2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இஸ்ரோவுக்கு ரூ. 666 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் 8.6 கோடி ரூபாய் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 12 கோடி ரூபாய் சிறிய ரக செயற்கைக்கோள்களை அனுப்பும் ஏவுகணைத் தயாரிக்கவும், 120 கோடி ரூபாய் ஏவுதளங்கள் மேம்பாடுக்காகவும் இஸ்ரோ ஒதுக்கியுள்ளது. சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு அடுத்த நிலையில் இருக்கும் யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்திற்கு 516 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்திற்காக மேலும் 75 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசிடம் இஸ்ரோ கோரிக்கை விடுத்துள்ளது. இதில் 60 கோடி ரூபாய் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்காகவும், 15 கோடி ரூபாய் வருவாய் செ‌லவினங்களுக்காகவும் கேட்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து