எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அரசியலில் திடீர் திருப்பமாக அன்புமணி ராமதாசுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போது கூட்டணி கணக்குகளில் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன.
அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பா.ஜ.க. விரும்புகிறது. அதற்கான முயற்சிகளை யும் பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசை பனையூரில் உள்ள இல்லத்தில் பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவரும், தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா எம்.பி. நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், டாக்டர் அன்புமணி ராமதாசிடம் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசியதாகத் தெரிகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க. இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. டாக்டர் அன்புமணி ராமதாசை பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்தித்துப் பேசியது அரசியலில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


