Idhayam Matrimony

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி

வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2025      இந்தியா
Irctc 2023-11-23

Source: provided

புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை பயன்படுத்தி ரயில் டிக்கெட்களை புக் செய்து கொண்டிருந்த நிலையில் இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் அவதியடைந்தனர்.

தீபாவளிக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை பயன்படுத்தி ஏராளானோர் ரயில் டிக்கெட்களை புக் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை சுமார் 10.45 மணி அளவில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் திடீரென முடங்கியது. இதனால், ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பலரும் அவதிக்கு உள்ளாகினர். குறிப்பாக தட்கல் மூலம் முன்பதிவு செய்ய முயன்றவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

தொழில்நுட்பக் கோளாறால் இந்த இடையூறு ஏற்பட்டதாக ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இணையதளம் மீண்டும் இயங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர். ஒரே நேரத்தில் அதிகப்படியான பேர்கள் பயன்படுத்தியதால் இணையதளம் முடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாத விரக்தியில் பலரும் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளம் முடங்கியது குறித்த ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வேதனை தெரிவித்தனர். பகல் 12.15 மணி அளவில் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது. எனினும், பல ரயில்களுக்கான டிக்கெட்டுக்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டதாக சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடங்குவது இது முதல்முறையல்ல. ஒரே நேரத்தில் அதிகப்படியானோர் இணையதளம் அல்லது ஆப்பில் டிக்கெட்டுக்களை புக் செய்ய முயல்வதால் இதுபோன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ள ரயில்வே அதிகாரிகள், இதுபோன்ற நேரங்களில் நேரடி முன்பதிவுகள், பயண முகவர்கள் மூலமான முன்பதிவுகளுக்கு முயலலாம் என கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து