ரஜினி புறக்கணிப்பதால் கமலுக்குத்தான் நஷ்டம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      தமிழகம்
jayakumar 2019 12 08

சென்னை : வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ரஜினி புறக்கணிப்பதால் கமலுக்குத்தான் நஷ்டம் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த், தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு தரவில்லை என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ரஜினி புறக்கணிப்பதால் கமலுக்குத்தான் நஷ்டம் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ரஜினி மக்கள் மன்ற அறிக்கை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, கவலை வேண்டாம், 2021-ம் ஆண்டு தேர்தலிலும் ரஜினி இதையேதான் கூறுவார். இதன் மூலமாக மிகவும் கவலைப்பட வேண்டியது, வருத்தப்பட வேண்டியது கமல் மட்டும்தான். இணைந்த கைகளாகச் செயல்படுவோம் என்று கூறியவர்கள் இப்போது இப்படி இருக்கிறார்கள். ரஜினியின் புறக்கணிப்பால்  கமலுக்குத்தான் நஷ்டம்.  இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து