எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பியாங்காங் : அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
உலகின் இரு எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு மே மாதம் முதல் முறையாக சிங்கப்பூரில் சந்தித்து பேசினர்.
அப்போது வடகொரியாவை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே அணுஆயுத பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டு சொல்லும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனால் டிரம்பும், கிம் ஜாங் அன்னும் 2-வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் சந்தித்து பேசினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிந்ததால் இருநாடுகளுக்கு இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தை முடங்கி போனது.
இந்த சூழலில் யாரும் எதிர்பாரத வகையில் டிரம்ப், கடந்த ஜூன் மாதம் வடகொரியாவுக்கு நேரில் சென்று கிம் ஜாங் அன்னை சந்தித்தார். அப்போது முடங்கிப்போன அணுஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என இருநாட்டு தலைவர்களும் உறுதிபூண்டனர்.
இதற்கிடையில் வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை எச்சரிக்கும் வகையில் தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவி சோதித்தது.
இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளால் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா கூறி வந்தது.ஆனால் வடகொரியாவோ, அமெரிக்கா தனது விரோதப்போக்கை மாற்றிக்கொள்ளும் வரை அணுஆயுத பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது என கூறியது.
மேலும் குறிப்பிடத்தக்க பொருளாதார தடைகளை நீக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டுவர அமெரிக்காவுக்கு வடகொரியா காலக்கெடு நிர்ணயித்தது.
அமெரிக்கா அப்படி செய்யாவிட்டால் வடகொரியா புதிய பாதையை கடைபிடிக்கும் என அந்த நாடு பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதுபற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமெரிக்கா மவுனம் காத்து வந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவுடனான அணுஆயுத பேச்சுவார்த்தைக்கான கதவை மூடுவதாக வடகொரியா அதிரடியாக அறிவித்தது.
ஐ.நா.வுக்கான வடகொரியா தூதர் கிம் ஜோங் இதுபற்றி கூறுகையில், ‘‘நாங்கள் இப்போது அமெரிக்காவுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை. ஏனெனில் வடகொரியா அணுஆயுதங்களை கைவிடவேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கனவே பேச்சுவார்த்தை அட்டவணையில் இருந்து வெளியேறிவிட்டது. எனவே அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை’’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


