இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற அமெரிக்க தம்பதி

புதன்கிழமை, 11 டிசம்பர் 2019      உலகம்
US couples nobel prize 2019 12 11

வாஷிங்டன் : அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் விநாயக் பானர்ஜி, இந்தியாவின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்றுக் கொண்டார். அதே போல, அவரது மனைவி எஸ்தர் டூப்லோ சேலை அணிந்து கொண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார்.

பொருளாதார நிபுணர்கள் அபிஜித் விநாயக் பானர்ஜி, எஸ்தர் டூப்லோ, மைக்கேல் கிரெமர் ஆகியோர் இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். வறுமையை ஒழிப்பதற்கான முன்னோடித் திட்டங்களை வகுத்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்வீடனில் நடந்த நோபல் பரிசளிப்பு விழாவில் இந்தியப் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து அபிஜித் விநாயக் பானர்ஜி நோபல் பரிசை பெற்றுக் கொண்டார். மேலும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்ற மற்றொரு வெற்றியாளரும், அபிஜித் விநாயக் பானர்ஜியின் மனைவியுமான எஸ்தர் டூப்லோ சேலை அணிந்து கொண்டு தனது பரிசை பெற்றுக் கொண்டார். மேலும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு நேர்காணல் ஒன்றில் பேசிய அபிஜித் , இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் சென்று வருகிறது. பொருளாதாரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதை அரசு உணர்வதும் அதிகரித்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் பொருளாதாரம் மோசமாகத்தான் இருக்கிறது என்று கருத்து தெரிவித்திருந்தார்.

சிறந்த பொருளாதார வல்லுநரான அபிஜித் பானர்ஜி, போர்டு பவுண்டேஷன் சார்பில் செயல்படும் மசசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொருளாதாரப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து