முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நதிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தமிழக - கேரள அதிகாரிகள் சென்னையில் பேச்சுவார்த்தை பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்து விவாதித்தனர்

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நதிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் மற்றும் கேரளா சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் சென்னையில் நேற்று முதற்கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கினர். அப்போது பரம்பிக்குளம், ஆழியாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நதிநீர் பிரச்சினைகளை தீர்க்க அரும்பாடுபட்டவர். காவிரி பிரச்சினைக்காக பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடச் செய்தவர் ஜெயலலிதா. இது தனது வாழ்நாளின் மிகப் பெரிய சாதனை என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்தார். அதன் பிறகு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை சுப்ரீம் கோர்ட்டை அணுகி 142 அடியாக உயர்த்திக் காட்டினார். 152 அடியாக உயர்த்திக் காட்டுவதே தனது லட்சியம் என்றும் அவர் கூறி வந்தார். அவரது வழியில் செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும் நதி நீர் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த செப்டம்பர் 25-ம் தேதி கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து பேசினார். அப்போது இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில், பல்வேறு விஷயங்கள் இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த இரு மாநிலத்திலும் செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பரம்பிகுளம், ஆழியாறு திட்டம் குறித்த குழுவில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், காவேரி தொழில் நுட்பக் குழுமத் தலைவர் ஆர். சுப்பிர மணியன், பொதுப்பணித் துறையின் ஓய்வு பெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் டாக்டர் ஆர். இளங்கோவன் உள்ளிட்டோர் இடம் பெற்றி ருந்தனர்.அதே போல பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்திற்கான குழுவில் க. மணிவாசன், ஆர். சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் ஈ. தமிழரசன், கண்காணிப்புப் பொறியாளர் எஸ். சிவலிங்கம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதே போல கேரளாவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரு மாநில குழுக்களும் சென்னையில் நேற்று பேச்சுவார்த்தையை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று சென்னையில் தமிழ்நாடு - கேரளா மாநிலங்களுக்கு இடையேயான பரம்பிக்குளம், ஆழியாறு திட்டம் குறித்து அமைக்கப்பட்ட குழுக்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. மணிவாசன், கேரள அரசின் நீர்வள ஆதாரத்துறை செயலாளர் டாக்டர். பி. அசோக் மற்றும் இரு மாநில குழு உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் மணிவாசன் பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் தொடர்பாக உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து