குடியுரிமை சட்ட போராட்டம் எதிரொலி: இந்திய வருகையை ஒத்தி வைத்தார் ஜப்பான் பிரதமர்

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      விளையாட்டு
Shinzo Abe 2019 11 21

புது டெல்லி : குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளதால் இந்தியா வரவிருந்த ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவின் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே இடையே இருநாட்டு உறவு குறித்தான சந்திப்பு வரும் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்த சட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளதால் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவின் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும் போது,

ஜப்பான் பிரதமர் அபேவின் இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களின் வசதிகேற்ப சந்திப்பு குறித்த தேதி வரும் நாட்களில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து