எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பல விவகாரங்களில் எம்.பி.க்கள் ஆக்கபூர்வமாக விவாதித்ததாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 18-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று முன்தினம் ரேப் இன் இந்தியா என்று பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இரு அவைகளிலும் அமளி நிலவியது. இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. கூட்டத் தொடரின் இறுதி நாளில் அவையின் செயல்பாடுகள் குறித்த புள்ளி விபரங்களை பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி சமர்ப்பித்தார்.
அதன்படி, குளிர்கால கூட்டத்தொடரில் லோக்சபா 116 சதவீதமும், ராஜ்யசபா 99 சதவீதமும் செயல்பட்டுள்ளது. லோக்சபாவில் 14 மசோதாக்களும், ராஜ்யசபாவில் 15 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ராஜ்யசபாவின் 250-வது கூட்டத் தொடரில் வரலாற்று சிறப்புமிக்க வகையில் ஏதும் நடைபெறவில்லை. அதே சமயம், பல விவகாரங்களில் எம்.பி.,கள் ஆக்கபூர்வமாக விவாதித்ததாக ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ராஜ்யசபா முதல் முறையாக 100 சதவீதம் செயல்பட்டு சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் லோக்சபா 108 மணி நேரம், 33 நிமிடங்களும், ராஜ்யசபா 107 மணி நேரம் 11 நிமிடங்கள் செயல்பட்டுள்ளது. மொத்தம் 11 மணி நேரம் 47 நிமிடங்கள் அமளி, குறுக்கீடுகளால் வீணடிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


