வரைவு வாக்காளர் பட்டியல் 23-ம் தேதி வெளியிடப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2019      தமிழகம்
Satyabrata Sahu1  2019 03 31

சென்னை : ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 23-ம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு, புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்க திருத்தத்துக்கான தீவிர பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதுவரை சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களை கொண்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 23-ம் தேதி வெளியிடப்படும். இந்த பட்டியலில் பெயர் சேர்க்கவோ, விவரங்களை திருத்தவோ 23-ம் தேதியில் இருந்து ஜனவரி 22-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி பிப்ரவரி 3-ம் தேதி முடிவடையும். துணைப்பட்டியல் தயாரிக்கும் பணி பிப்ரவரி 11-ம் தேதி நடக்கும். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து