பிரம்மாண்டமான பலூன் திருவிழா அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2020      சிவகங்கை
7 ballon fest

சிவகங்கை - சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் இரண்டாம் நாளாக பிரம்மாண்டமான பலூன் திருவிழா மற்றும் விமானவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 5 மணிக்கு துவங்கிய இவ்விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தொழிலதிபர்கள், பெற்றோர்கள் மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், தயாராக இருந்த பிரம்மாண்டமான பலூன்களில் உற்சாகத்தோடு பறந்தனர்.
முதல் நாள் நிகழ்வான துவக்க விழா நிகழ்ச்சியை கதர் மற்றும் கிராம தொழில் வாரிய அமைச்சர் திரு. பாஸ்கரன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 100 அடிக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்ட பிரம்மாண்ட பலூனில் காற்றினை நிரப்பி அதனை சூடேற்றி வெளிப்புற காற்று அழுத்தத்திற்கு ஏற்ப இயக்கி, வானில் பயணிக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கத்துடன் விழா துவங்கியது. பிரம்மாண்ட பலூனில் காற்றை நிரப்பும் போது கலந்துகொண்ட பொதுமக்கள் பெரும் வியப்புடன் பார்வையிட்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கூறியதாவது :
விவசாயத்தை நம்பியுள்ள கிராமப்புற பகுதிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நமது பகுதியில் கல்வி கற்போரின் சிறப்புகள் நாள்தோறும் பெருகி வருகின்றது. இன்று நடைபெறுகின்ற விமானத்துறை சம்பந்தப்பட்ட கண்காட்சி போல் அனைத்து பள்ளிகளும் புதுமையான பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். சிறப்பான, புதுமையான முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தி வரும் மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளிக்கு வாழ்த்துக்கள். பெற்றோர்கள் மாணவர்களை இது போன்ற நல்ல  பயிற்சிகளுக்கு உட்படுத்தும் போது, மிகவும் ஒழுக்கம் உடையவர்களாக வலம் வருவது உறுதி என்றார்.
 ஆர்சி மாதிரி விமானங்களின் சாகச பயணம், விமான ஓட்டுனர் பயிற்சி, காகித விமான வடிவமைப்பு பயிற்சி, பல்வேறு நவீன விமானங்களின் கண்காட்சி என மாணவர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் விதமாக துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளோடு பல்வேறு பயிற்சிகள் நடைபெற்றன.
 மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சி மேலும் இரு நாட்கள் கூடுதல் பயிற்சிகளுடன் நடைபெற உள்ளது. திங்கட்கிழமை மாலை 6 மணியுடன் இவ்விழா நிறைவு பெற உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினார்.
விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன், டிஎஸ்பி அப்துல் கபூர், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர். ராதாகிருஷ்ணன் பெண்விமானி.பூர்ணா பார்த்தசாரதி, நகர்பிரமுகர்கள் உதயசூரியன், பள்ளி நிர்வாகிகள் ராமதாஸ், தெட்சணாமூர்த்தி, கலைக்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
பள்ளித் தலைவர் பால.கார்த்திகேயன் தலைமையில் குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவன மேலாளர் பெனடிக்ட், ஜீ லர்ன் நிறுவன மேலாளர் லோகேஷ்குமார் குழுவினர் விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து