முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன் 50-வது சதத்தை இரட்டை சதமாக மாற்றிய புஜாரா - உயர் பட்டியலில் இணைந்தார்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

ராஜ்கோட் : ராஜ்கோட்டில் நடைபெறும் எலைட் ரஞ்சி டிராபி பி பிரிவு ஆட்டத்தில் கர்நாடகா பந்து வீச்சை புரட்டி எடுத்த புஜாரா தன் 50-வது முதல் தர கிரிக்கெட் சதத்தை எடுத்ததோடு அதனை இரட்டைச் சதமாக மாற்றியுள்ளார்.

நேற்று முன்தினம் 162 நாட் அவுட் என்று தொடங்கிய புஜாரா 2-ம் நாளான நேற்று உணவு இடைவேளை வரை 223 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்கிறார். இவருடன் ஷெல்டன் ஜாக்சன் 150 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்காக 378 ரன்களைச் சேர்க்க சவுராஷ்ட்ரா அணி உணவு இடைவேளையின் போது 411/2 என்று வலுவான நிலையில் உள்ளது. ஷெல்டன் ஜாக்சன் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களை விளாச புஜாரா 22 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என்று ஆடிவருகிறார். இதன் மூலம் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் உள்ளிட்டோர் அடங்கிய 9 வீரர்கள் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் 50 சதங்களுடன் நுழைந்துள்ளார். இதில் அலிஸ்டர் குக் 65 சதங்கள், இயன் பெல் 57 சதங்கள், ஹஷிம் ஆம்லா 52 சதங்கள், வாசிம் ஜாபர் 57 சதங்கள் ஆகியோர் அடங்கிய முதல்தர சாதனையாளர்கள் பட்டியலில் புஜாரா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் தர கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர் மற்றும்  டெண்டுல்கர் ஆகியோர் 81 சதங்களுடன் முதல் 2 இடங்களில் உள்ளனர், ராகுல் திராவிட் 68 முதல் தர சதங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து