முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார்கள் : அனில் கும்ப்ளே சொல்கிறார்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : ஐ.சி.சி. ஆட்சி மன்றக்குழு நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்மொழிந்த நிலையில், எல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள் என அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் தற்போது ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது. ஐ.சி.சி. தற்போது அதிக அளவிலான சர்வதேச சாம்பியன்ஸ் போட்டிகளை நடத்த விரும்புகிறது. இதற்கிடையில் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரையையும் நடத்தி வருகிறது. சர்வதேச போட்டிகளை அதிக அளவில் நடத்த வேண்டுமென்றால் நாட்கள் வேண்டும். இதனால் டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைத்தால் ஐ.சி.சி. தொடரை நடத்த அதிகமான நாட்கள் கிடைக்கும் என நினைத்தது. இதனால் ஐ.சி.சி. ஆட்சி மன்றக்குழு ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்டை நான்கு நாட்களாக குறைக்க முன்மொழிந்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் பெரும்பாலான வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் தலைவரான அனில் கும்ப்ளே, எல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில், ஒவ்வொருவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாட விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.

இது தெளிவாக தெரிகிறது. தற்போதைய காலத்து வீரர்கள் ஐந்து நாள் கிரிக்கெட் விரும்புகிறார்கள் என்றார். அனில் கும்ப்ளே தலைமையிலான ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி வரும் மார்ச் மாதம் முன்மொழிவு குறித்து விவாதம் நடத்த இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து