எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : தேர்வு குறித்த விவாதம் 2020-ல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
பரிக்ஷா பே சர்ச்சா என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு குறித்த கலந்துரையாடி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடும் தேர்வு குறித்த விவாதத்தின் முதலாவது நிகழ்ச்சி கடந்த 2018 பிப்ரவரி 16 அன்று டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடும் தேர்வு குறித்த விவாதத்தின் இரண்டாவது நிகழ்ச்சி 2019 ஜனவரி 29 அன்று அதே இடத்தில் நடைபெற்றது. தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 3-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதற்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில் 3-வது ஆண்டாக தேர்வு குறித்த விவாதம் 2020 இன்று (ஜனவரி 20-ம் தேதி) காலை 11 மணிக்கு டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. தேர்வு குறித்த மனஅழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி, தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பதோடு அவர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த தனித்துவமான நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பது மட்டுமின்றி பிரதமரிடமிருந்து சிறந்த ஆலோசனைகளைப் பெற வேண்டுமென்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பிரதமர் அலுவலம் அழைப்பு விடுத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


