விக்கெட் கீப்பராக பணியினை கே.எல்.ராகுல் செய்வார் :கோலி

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      விளையாட்டு
KL-Rahul 2020 01 20

புதுடெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான வகையில் விக்கெட் கீப்பிங் செய்த லோகேஷ் ராகுல், தொடர்ந்து அந்த பணியைச் செய்வார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். பேட் கம்மின்ஸ் வீசிய பந்து அவரின் ஹெல்மெட்டில் தாக்கியதால் மூளையதிர்ச்சி ஏற்பட்டு வெளியேறினார். 2 - வது போட்டியில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றினார். சிறப்பாக பேட்டிங் செய்ததுடன், கேட்ச் மற்றும் ஸ்டம்பிங்கிலும் அசத்தினார். இதனால் 3 - வது போட்டிக்கு ரிஷப் பண்ட் தயாரானபோதும் கே.எல்.ராகுல்தான் விக்கெட் கீப்பராக பணியாற்றினர். இவர் விக்கெட் கீப்பராக பணியாற்றினால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க முடியும். பேலன்ஸ் கொண்ட அணியை தேர்வு செய்ய முடியும். ஆகையால் அவர் விக்கெட் கீப்பர் பணியை தொடர்ந்து செய்வார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பணிக்கு திரும்புவது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து