முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      உலகம்
Image Unavailable

நியூயார்க்  : பாகிஸ்தான் தொடர்ந்து விஷம் கக்கும் வார்த்தைகளையும், தவறான விளக்கங்களையுமே பேசி வருகிறது. சூழல் அறியாமல் வெறுப்புணர்வுடன் பேசுகிறது என்று ஐ.நா.வில் இந்தியா கடுமையாகச் சாடியுள்ளது.

ஐ.நா.வின் ஆண்டுச் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பாகிஸ்தானின் பிரதிநிதி சாத் அகமது வாரியாச் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிப் பேசினார். அப்போது எந்த சூழலிலும் காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தனது பொறுப்புகளைக் கைவிடக் கூடாது என்று தெரிவித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி நாகராஜ் நாயுடு பேசுகையில்,

உண்மையான சூழலைச் சர்வதேச சமூகம் அறிய விடாமல் தெளிவற்ற தன்மையையும், குழப்பத்தையும் பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது. இரு தரப்பு உறவுகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, போர் செய்வதற்கான விருப்பத்தையும், கசப்பான விமர்சனங்களையும் வலுக்கட்டாயமாக பேசி வருகிறது. உண்மையான சூழலை அறியாமல் பாகிஸ்தான் பிரதிநிதி தொடர்ந்து வெறுப்புப் பேச்சுகளைப் பேசி வருகிறார். ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் பிரதிநிதி பேசும் போதும், விஷம் கக்கும் வார்த்தைகளையும், பொய்யான விவரிப்புகளையும் எடுத்துக் கூறுகிறார். இது உண்மையிலேயே மிகவும் வியப்பாக இருக்கிறது. பாகிஸ்தான் தங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரை முற்றிலும் அழிக்கும் செயலில் இறங்கி விட்டு, சிறுபான்மையினரை பாதுகாக்கும் விஷயத்தைப் பற்றிப் பேசுகிறது. பாகிஸ்தான் போலித்தனத்தையும், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொய்யான தோற்றத்தை வெளிப்படுத்தி திசை திருப்புகிறது. பாகிஸ்தானின் பொய்யான வார்த்தை ஜாலங்களை யாரும் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டு, அது தன்னுடைய இயல்பான நிர்வாக ரீதியான பணிகளுக்குத் திரும்புவது அவசியம் என்று நாகராஜ் நாயுடு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து