வங்கதேச அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக கிப்சன் நியமனம்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2020      விளையாட்டு
Gibson Bangladesh Coach 2020 01 23

தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஒட்டிஸ் கிப்சனை வங்காளதேசம் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த ஒட்டிஸ் கிப்சன் (வயது 50), தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். உலக கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் நீக்கப்பட்டார். தற்போது வங்காளதேசம் ஒட்டிஸ் கிப்சனை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவர் வங்காளதேச அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக 2022 வரை செயல்படுவார். வங்காளதேசம் பாகிஸ்தான் சென்று விளையாடுகிறது. அப்போது ஒட்டிஸ் கிப்சன் அணியில் இணைவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து