முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது ஆட்சியில் யாருடைய போனையும் ஒட்டுக்கேட்கவில்லை: பட்னாவிஸ்

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : எனது ஆட்சியில் யாருடைய போன் அழைப்பையும் ஒட்டுக்கேட்கவில்லை என்றும், போன் அழைப்புகள் ஒட்டுகேட்பது மகாராஷ்டிரா கலாசாரம் அல்ல என்றும் முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.  

மகாராஷ்டிரா உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், “முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் அரசு மாநில சைபர் போலீஸ் பிரிவு உதவியுடன் பலரது போன் அழைப்புகளை ஒட்டு கேட்டுள்ளது. குறிப்பாக மகா விகாஸ் அகாடி கூட்டணி பேச்சுவார்த்தையின்போது எதிர்க்கட்சி தலைவர்களின் போன் அழைப்புகள் அதிக அளவில் ஒட்டுக்கேட்கப் பட்டன. இதற்கு பயிற்சி எடுப்பதற்காக சில அதிகாரிகள் இஸ்ரேல் அனுப்பப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ்   வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களின் நம்பகத்தன்மை என்ன என்பது நாடு முழுமைக்கும் தெரியும். போன் அழைப்புகள் ஒட்டுகேட்பது மகாராஷ்டிரா கலாசாரம் அல்ல. ஒட்டுக் கேட்பது குறித்து எனது ஆட்சியில் உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. மராட்டிய மக்கள் உண்மையை அறிவார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து