ஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய இளைஞர் பலி

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      இந்தியா
Puppy Game-2020 01 25

Source: provided

 

புனே : மகாராஷ்டிர மாநிலத்தில் பப்ஜி கேம் விளையாடிய இளைஞருக்கு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.  

 

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் பப்ஜி கேம் வைரலாக பரவி வருகிறது. இதுவரை வெளிவந்த மொபைல் 'கேம்'களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் இளைஞர்கள், கல்லூரி பெண்கள் மத்தியில் 'பப்ஜி' விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது. 

 

இது அவர்களின் நேரத்தை வீணடித்து அந்த விளையாட்டிற்கு அடிமைகளாகவும் உருவாக்குகிறது. கேம் விளையாடுவதை தடுத்தால் அவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்பட்டு விபரீதத்தில் முடிகிறது. அதேசமயம், தொடர்ந்து இந்த கேமை விளையாடுவதால் உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.  

 

அவ்வகையில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் ஆக்ரோஷமாக பப்ஜி விளையாடியபோது மூளை பக்கவாதம் ஏற்பட்டு பலியாகி உள்ளார். 

 

புனே அருகே உள்ள ஷிண்டேவாடி பகுதியைச் சேர்ந்த ஹர்ஷல் மீமான் என்ற அந்த இளைஞர், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. 

 

டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவத்தால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. 

 

பிரேத பரிசோதனை அறிக்கையை மேற்கோள் காட்டி காவல்துறை அறிக்கை  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து