இன்று நாட்டின் 71-வது குடியரசு தினம் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      இந்தியா
republic day security force delhi 2020 01 25

புது டெல்லி : நாட்டின் 71-வது குடியரசு தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் முப்படை அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் அலங்காரயூர்திகளின் அணிவகுப்பு ஆகியவை இடம்பெறுகின்றன. தமிழக அரசின் சார்பில் ஐயனார் கோவில் கோடை விழா போன்ற காட்சி அமைப்பு அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கான ஒத்திகைகள் முடிந்திருக்கும் நிலையில், விழா நடைபெறும் ராஜ பாதை முதல் செங்கோட்டை வரையிலான  பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

15 ஆயிரம் காவலர்கள் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினர், துணை ராணுவ படைவீரர்கள் என பல்வேறு குழுக்களாக ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். முக்கிய இடங்களான செங்கோட்டை, சாந்திநிஷாக் என்கின்ற 150-க்கும் மேற்பட்ட இடங்கள் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன. டெல்லிக்கு ரயில் மூலம் வரும் பார்சல் சர்வீசுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் அண்மையில் கைதுசெய்யப்பட்டது,  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம், டெல்லி பேரவை தேர்தல் போன்ற காரணங்களால் எப்போதும் இல்லாத வகையில் குடியரசு தினத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து