எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுச்சேரி : தாய், மகனை கொலை செய்த பூ வியாபாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுச்சேரி வானரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் குணவதி(வயது 37). பூ வியாபாரம் செய்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன்(32) என்பவர் புதுசாரம் பகுதியில் தங்கி இருந்து பூ வியாபாரம் செய்து வந்தார். பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது. அதனை அவர் மறைத்து குணவதியுடன் பழகி வந்தார்.
இந்தநிலையில் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் குணவதி கர்ப்பமானார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சதீஷ்குமார் என்று பெயர் சூட்டினர். அதன்பின்னர் தான் பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது குணவதிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பிரபாகரனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 25-11-2017 அன்று தட்டாஞ்சாவடியில் உள்ள சுப்பையா நகருக்கு குணவதியை குழந்தையுடன் பிரபாகரன் வரவழைத்தார். அங்கிருந்து அவர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கிளியனூர் அருகே உள்ள சித்தேரி பகுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கு குணவதியையும், அவரது மகனையும் கழுத்தை நெரித்து கொலை செய்து பிணங்களை வீசினார். பின்னர் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
இது குறித்து குணவதியின் சகோதரர் குருமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து அவரிடம் இருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். பின்னர் குணவதி, அவரது மகன் சதீஷ்குமார் ஆகியோரின் பிணங்களை மீட்டனர். இதையடுத்து பிரபாகரனை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து புதுச்சேரி 2-வது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோரிமேடு போலீசார் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிபதி சுபா அன்புமணி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே பிரபாகரன் ஜாமீனில் வெளியே வந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் தாய், மகனை திட்டமிட்டு கொலை செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து பிரபாகரன் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Jan 2026சென்னை, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட'த்தை செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட
-
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்:ஐ.நா. உடனடியாக தலையிட கொலம்பியா வலியுறுத்தல்
03 Jan 2026கராகஸ், வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று கொலம்பியா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
-
அறநிலையத்துறை சார்பில் ரூ.109 கோடி மதிப்பிலான 19 புதிய திட்டப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
03 Jan 2026சென்னை, அறநிலையத்துறை சார்பில் ரூ.15 கோடியே 30 லட்சம் செலவில் 7 கோவில்களில் 10 முடிவுற்ற பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-01-2026
03 Jan 2026 -
வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? வெளியான புதிய கருத்து கணிப்பால் பரபரப்பு
03 Jan 2026சென்னை, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பான ஐ.டி.பி.ஐ., தமிழகம் முழுவதும் 2026 சட்டசபை தேர்தல் குறித்து கருத்துகணிப்பு மேற்கொண்டுள்ளது.
-
இலங்கை கடற்படையால் தற்போது கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
03 Jan 2026சென்னை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கைக் காவலில் இருக்கும் அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் பட
-
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு
03 Jan 2026சென்னை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை மேற்கொண்டது.
-
வெனிசுவேலா அதிபர் மதுரோவை சிறைப்பிடித்த அமெரிக்க ராணுவம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
03 Jan 2026நியூயார்க், வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவை சிறைப்பிடித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள்முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
03 Jan 2026சென்னை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 750 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
-
வரம்பை மீறும் குரோக் ஏ.ஐ.: எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்
03 Jan 2026புதுடெல்லி, வரம்பை மீறும் குரோக் ஏ.ஐ.
-
மராட்டிய உள்ளாட்சி தேர்தல்: 66 இடங்களில் பா.ஜ.க., சிவசேனா கட்சியினர் போட்டியின்றி வெற்றி
03 Jan 2026மும்பை, மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் 66 இடங்களில் பா.ஜ.க., சிவசேனாவை சேர்ந்தவர்கள் போட்டியின்றி வெற்றிப்பெற்றுள்ளனர்.
-
அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளை கேட்காமலே நிறைவேறும் தி.மு.க. அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு
03 Jan 2026சென்னை, அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் கேட்காமலே நிறைவேறும் தி.மு.க.
-
மெக்சிகோவில் நிலநடுக்கம்: 2 பேர் பலி
03 Jan 2026மெக்சிகோ சிட்டி, தெற்கு மற்றும் மத்திய மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி
03 Jan 2026வாஷிங்டன், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், 4 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.
-
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: ரஷ்யா, ஈரான் கடும் கண்டனம்
03 Jan 2026மாஸ்கோ, வெனிசுலா மீதான தாக்குதலுக்கு கியூபா, கொலம்பியா மற்றும் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது
03 Jan 2026சென்னை, இலங்கை கடற்படையால் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூட்டணி குறித்து த.வெ.க.வுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தையா..? செங்கோட்டையன் விளக்கம்
03 Jan 2026ஈரோடு, விஜய் தான் தமிழகத்தின் முதல்வர் என ஏற்றுக்கொள்கிற கூட்டணிதான் த.வெ.க.வில் இணையும் என்று தெரிவித்துள்ள செங்கோட்டையன் கூட்டணி குறித்து த.வெ.க.வுடன் காங
-
சத்தீஸ்கரில் 2 இடங்களில் என்கவுண்டர்: 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
03 Jan 2026ராய்பூர், சத்தீஸ்கரில் பதுங்கிருந்த 14 நக்சலைட்டுகளை என்கவுண்டரில் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
-
வருகிற 9-ம் தேதி அ.தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல் துவக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
03 Jan 2026சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்.
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
03 Jan 2026மும்பை, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை பி.சி.சி.ஐ. நேற்று அறிவித்தது.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலி அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
03 Jan 2026சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க புதிய செயலியை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கையால் போர் பதற்றம்
03 Jan 2026டெஹ்ரான், ஈரானின் உள்விவகாரங்களில் தலையிட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.&nbs
-
விதர்பா அணிக்கு எதிராக முதல் சதமடித்த ஹார்திக் ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசல்
03 Jan 2026மும்பை, விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அசத்திய ஹார்திக் பாண்டியாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
தகவல்கள், படங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
03 Jan 2026புதுடெல்லி, பதிவு செய்யப்படும் தகவல்கள், படங்களுக்கு சமூக வலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் ஜன. 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
03 Jan 2026சென்னை, தமிழகத்தில் நாளை முதல் 9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


