ஆஸி. ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பெடரர்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      விளையாட்டு
Federer 2020 01 28

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடர அரை இறுதிக்கு முன்னேறினார்.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மற்றும் அமெரிக்கா வீரர் டென்னிஸ் சாண்ட்ரென் மோதினர். ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் 6-3 2-6 2-6 7-6(8) 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டென்னிஸ் சாண்ட்ரெனை வெளியேற்றி அரை இறுதிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி சுற்றில் ரோஜர் பெடரர் 15-வது முறையாக முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து