முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணியின் போது துப்புரவு பணியாளர் இறந்தால் ரூ.1 கோடி நிதி: ஆம் ஆத்மி

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2020      அரசியல்
Image Unavailable

பணியில் இருக்கும் போது துப்புரவு பணியாளர் இறந்தால் அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி மாநில சட்ட சபைக்கு வருகிற 8-ம் தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் டெல்லியில் உச்சக்கட்ட அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும் முனைப்போட்டி நிலவுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது மும் முனைப்போட்டி ஏற்பட்டது. அப்போது மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் ஆம்ஆத்மி வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்தது. அதே போன்று இமாலய வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கடந்த முறை வெறும் 2 இடங்கள் பெற்ற பாரதிய ஜனதா கட்சியும், ஒரு இடம் கூட கிடைக்காத காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது. அதில், துப்புரவு பணியாளர்கள் பணியில் இருக்கும் போதே இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ 1.கோடி நிதியுதவி, டெல்லி முழுவதும் தடையில்லா (24 மணி நேரமும்) மின்சாரம் மற்றும் சுத்தமான குடிநீர், டெல்லியில் உள்ள பள்ளிகளில் தரமான கல்வி, தேசபக்தி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து