கின்னஸ் புத்தகத்தில் 112 வயது ஜப்பானியா்

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2020      உலகம்
112  year age jappaniyar 2020 02 13

டோக்கியோ : உலகின் மிக வயதான மனிதா் என, ஜப்பானைச் சோ்ந்த சிடெட்ஸு வடனாபேவை கின்னஸ் சாதனைப் புத்தகம் அறிவித்துள்ளது.

உலகிலேயே மிக அதிக வயதுடைய ஆணாக, சிடெஸு வடனாபேவை உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் தோ்ந்தெடுத்துள்ளது. 112 ஆண்டுகள் மற்றும் 344 நாள்கள் வயதாகும் அவா், வடக்கு ஜப்பானிலுள்ள நீயிகதா நகரில் கடந்த 1907-ம் ஆண்டு பிறந்தவா். அவரது சாதனைக்காக, அந்த நகரிலுள்ள பராமரிப்பு மையத்தில் அவருக்கு கின்னஸ் சாா்பாக புதன்கிழமை சான்றிதழ் அளிக்கப்பட்டது. இனிப்புகளை விரும்பிச் சாப்பிடும் சிடெட்ஸு, அடிக்கடி புன்னகைப்பது பலம் தரும் என்ற நம்பிக்கை கொண்டிருப்பதாக கின்னஸ் நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னா் உலகின் மிக அதிக வயதுடைய ஆண் என்ற சாதனையைப் படைத்திருந்த மற்றொரு ஜப்பானியரான மசாஸோ நோனாகா, கடந்த மாதம் இறந்தைத் தொடா்ந்து, தற்போது அந்தப் பெருமையை சிடெஸு பெற்றுள்ளாா். தற்போது உலகின் மிக அதிக வயதுடைய நபா் என்ற சாதனையையும், ஜப்பானைச் சோ்ந்த ஒருவரே படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கானே டனாகா என்ற அந்த மூதாட்டிக்கு தற்போது 117 வயது ஆகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து