முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை சீண்ட வேண்டாம்: அன்புமணிக்கு அருள் எம்.எல்.ஏ. எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      தமிழகம்
anbumani 2025-01-03

சேலம், அன்புமணி பற்றிய பல உண்மைகள்  தெரியும் என்று தெரிவித்துள்ள பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், என்னை சீண்ட வேண்டாம் என்று அன்புமணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சேலம் வாழப்பாடியில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் மற்றும் அவருடைய ஆதரவாளர் சென்ற கார்கள் மீது நேற்று திடீரென தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அப்போது, ஆதரவாளர்கள் தடுக்க முயன்றபோது அவர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளராக எம்.எல்.ஏ. அருள் இருந்து வருகிறார்.

அவருக்கு ஆதரவாக அவ்வப்போது பேசியும், கருத்துகளை கூறியும் வருகிறார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே இணக்கமற்ற சூழல் காணப்படும் நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுக்க வந்தனர். அப்போது, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கற்களை கொண்டு வீசினர். கட்டைகள், தடிகள் உள்ளிட்டவற்றை கொண்டும் தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தில் 6 கார்கள் உடைக்கப்பட்டு உள்ளன. 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுபற்றி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, சேலம் வாழப்பாடியில் எங்களை இடைமறித்து வாகனங்களை தாக்கினர். என் மீது நடந்த தாக்குதலுக்கு அன்புமணிதான் காரணம். அன்புமணி என்னை சீண்ட வேண்டாம். அவர் அடியாட்களை அனுப்பி தாக்க முயன்றது வருத்தமளிக்கிறது. அன்புமணி பற்றிய பல உண்மைகள் எனக்கு தெரியும் என்று கூறினார்.

அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி கூறும்போது, என்னுடைய ஆதரவாளர் கார் மீது தாக்குதல் நடந்துள்ளது. என்னை, இருவர் கத்தியால் கொல்ல முயன்றனர். கட்டை, கத்தி மற்றும் கம்பிகளை கொண்டு தாக்கினர். போலீசார் எனக்கு பாதுகாப்பு தருவார்கள் என நம்புகிறேன். நான் ஒரு எம்.எல்.ஏ. சட்டத்தின் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். நான் தவறு செய்தால் என்ன நடவடிக்கை வேண்டுமென்றாலும் எடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து