இறுதி பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் மொத்தம் 6.13 கோடி வாக்காளர்கள்

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
Tamil-Nadu-State-Election-Commission 2020 02 14

தேர்தல் ஆணையம் நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.13 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

2020-ம் ஆண்டுக்கான தமிழக இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி  தமிழகத்தில் மொத்தம் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் - 3,02,54,172, பெண்கள் - 3,10,45,969, மூன்றாம் பாலினத்தவர்கள் - 6,497 பேர் வாக்காளர்களாக உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6,60,317 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க www.nvsp.in  என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் கூகுள் பிளே ஸ்டோரில் voter helpline App டவுன்லோடு செய்து அதன்மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து