கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்று தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 18 பெப்ரவரி 2020      தமிழகம்
Keeladi work 2020 02 18

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை இன்று தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் தொடக்கி வைக்கிறார். 

கீழடி பள்ளிச் சந்தை திடல் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் பழங்கால தொல்பொருள்கள் அதிகளவில் கிடைத்ததை அடுத்து அந்த பகுதியில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசின் ரூ. 20 கோடி நிதியுதவிடன் கடந்த 2015 மார்ச் 2-ல் கீழடி பள்ளிச் சந்தை திடலில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. முதல் 3 கட்ட அகழாய்வுப் பணிகளை இந்திய தொல்பொருள் அகழாய்வுத் துறை மேற்கொண்டது. அதைத்தொடா்ந்து, 4 மற்றும் 5 ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இந்நிலையில் அடுத்தக்கட்ட பணிகள் இன்று துவங்குகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து