Idhayam Matrimony

சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் படுகொலை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2025      உலகம்
Trump 2024 08 17

வாஷிங்டன், சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் அமெரிக்க உரைபெயர்ப்பாளர் ஒருவர் என 3 பேர் பலியானார்கள். 3 வீரர்கள் காயமடைந்தனர்.

இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, எங்கள் மீதும், சிரியா மீதும் ஐ.எஸ்.ஐ.எஸ். தொடுத்த தாக்குதல் இது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கின்றோம். அவர்களுக்காகவும், அவர்களின் பெற்றோர் மற்றும் அன்புக்குரியவர்களுக்காகவும் நாங்கள் வேண்டி கொள்கிறோம் என கூறினார்.

இதற்கு நாங்கள் பதிலடி தருவோம் என அதிபர் ட்ரம்ப் சூளுரைத்து உள்ளார். காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய தனிநபர் ஒருவர் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டு விட்டார். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷரா, வெள்ளை மாளிகையில் சில வாரங்களுக்கு முன் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து