Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து இந்தியர் உள்பட 4 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2025      உலகம்
Suicide 2023 04 29

கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியர் உள்பட 4 பேர் பலியாயினர்.

தென் ஆப்பிரிக்காவின் வாசுலு நட்டல் மாகாணம் டர்பன் நகரில் உள்ள மலைப்பகுதியில் இந்து மத வழிபாட்டு தலமான நரசிம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கட்டுமான பணியின்போது திடீரென கோவில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், பக்தர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதில் விக்கி ஜெய்ராஜ் என்ற இந்தியரும் அடக்கம். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் ஒரு நபர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து