எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை, திருவண்ணாமலைக்கு நேற்று வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடியில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை 4 மணி அளவில் பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞர் அணி செயலாளரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினார். முன்னதாக திருவண்ணாமலைக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான மேல்செங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சி திடலுக்கு செல்லும் வழியில் பிரமாண்டமாக வரவேற்பு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. மண்டலங்கள் வாரியாக நடைபெறும் இந்த தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மண்டலத்தில் இருந்து தொடங்கப்பட்டு அதுவும் திருவண்ணாமலையில் முதலில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் வருகையையொட்டி நேற்று திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டிருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


