தங்கம் விலை சவரன் ரூ.31,720-க்கு விற்பனை

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      வர்த்தகம்
gold  2020 02 19

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.312 உயர்ந்து ரூ.31,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டே வருகிறது. அமெரிக்க டாலரின் விலையில் ஏற்படும் மாற்றமே சர்வதேச தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. அதை பொருத்து இங்கும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அதன் விலையை பொறுத்து மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறுவதும், அடுத்த நாள் பெயரளவுக்கு குறைவதுமான நிலை நீடித்தது.

இந்நிலையில், கடந்தசில நாட்களாக சரிந்து வந்த நிலையில், தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.39 உயர்ந்து ரூ.3,965-க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,720-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலையை போல் வெள்ளியின் விலையும் நேற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.51.80க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 1200 ரூபாய் உயர்ந்து 51,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து